News & Events

andal

  
திருப்பவை பாடல்கள்

அருள்மிகு நாச்சியார் (ஆண்டாள்) திருக்கோயிலுக்கு வருக! Srivilliputhur Andal Temple

தமிழகத்தில் பிறந்த ஒவ்வொருவரின் ஆன்மாவும் ஸ்ரீவில்லிப்புத்தூர் என்ற பெயரைக் கேட்டமாத்திரத்தில் பொழிவு பெறும். 108 திவ்ய தேசங்க்களில் ஒன்றாகக் கருதப்படும் ஸ்ரீவில்லிபுத்தூர் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. ‘பெரியாழ்வார்’ என்று அன்போடு அழைக்கப்படும் பகவான் ஸ்ரீகிருஷ்ண பக்தர் ‘விஷ்ணுசித்தர்’ மற்றும் அவருக்கு தெய்வமகளாக அவதரித்த ‘ஆண்டாள்’ மூலமாக ஸ்ரீவில்லிப்புத்தூர் உலகளாவிய தெய்வீகச் சிறப்புப் பெற்றுள்ளது.

ஸ்ரீவில்லிப்புத்தூர் என்று சொல்வோரின் பாதமலர்களை வணங்கிடும் அளவிற்கு வைணவ பக்தியை ஓங்கச் செய்திருக்கிறது, ஸ்ரீவில்லிப்புத்தூர். ஆண்டாள், மானிடனாகப் பிறந்த ஜீவாத்மா இறைவனான பரமாத்வோடு இன்றிணைவதைக் குறிப்பிடவே ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வாரின் தெய்வமகளாகப் பிறந்து, வளர்ந்து, இறைவனை அடைந்து வழிகாட்டியுள்ளார். Andal Temple Andal

ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் நகரம் பகவான் ஸ்ரீமஹாவிஷ்ணுவின் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. பகவான் மஹாவிஷ்ணு, பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் ஆகியோர் ஒருசேர வீற்றிருக்கும் ஸ்ரீவில்லிப்புத்தூர், பக்தர்களுக்கும், வைணவர்களுக்கும் மிகச் சிறந்த புண்ணியத் தலமாக விளங்குகிறது. கலைவிரும்பிகளை இத்தலதிலுள்ள சிற்பங்கள் மற்றும் பழங்கால ஓவியங்கள் கவர்ந்திழுக்க வல்லவை. இத்திருத்தலமானது, ஆண்டாளின் ‘திருப்பாவை’ மற்றும் பெரியாழ்வாரின் ‘திருப்பல்லாண்டு’ ஆகிய மஹாவிஷ்ணு பக்திப்பதிகங்களைத் தமிழ் இலக்கியத்திற்கு வழங்கியுள்ளது. தமிழ் வேதம்- ஆழ்வார் பாசுரம் என்று போற்றப்படும் இப்பக்திப்பாடல்கள் இத்திருக்கோயிலில் நாள்தோரும் இசைக்கப்படுகின்றன. Andal Temple Andal

more ››

   விஷ்வரூப தரிசனம் -6.30 A.M
   கால சாந்தி பூஜை -8.30 A.M
  உச்சிகால பூஜை -12 NOON
   நடை திருக்காப்பிடுதல் -1.00 P.M
   நடை திறப்பு -4.00 P.M
   சாயரக்ஷை  - 6.00 P.M
   ATTHALAM -8.00 P.M
   அத்தாளம் -9.00 P.M