andal

 

 

andal

சுற்றுலாத் தலங்கள்

வனம் மற்றும் வன உயிரினங்கள்: செண்பகத்தோப்பு அணில்கள் சரணாலயம்

மேற்கு தொடர்ச்சி மலைகளின் கிழக்குச் சரிவுகளில் இந்த வனங்கள் அமைந்துள்ளன. 6.3% சுற்றுப்பரப்பு மட்டுமே வனப்பகுதியாக இருக்கின்றது. மலைச்சரிவில் பல அரிய வகை தாவரங்களும் விலங்கினங்களும் வாழ்கின்றன. ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுக்காவில் உள்ள செண்பகதோப்பில் 1989ஆம் ஆண்டு 480 ச.கிமீ அளவில் ஒரு வனவிலங்குகள் சரணாலயம் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் தென்மேற்குப் பகுதியில் பெரியார் புலிகள் சரணாலயமும், வடமேற்கில் மேகமலைக் காடுகளும் உள்ளன. கடல்மட்டத்திலிருந்து சுமார் 100மீ முதல் 2010மீ வரை உயர்ந்து உள்ளது. இந்த சரணாலயம் அழிந்துவரும் அரிய உயிரினங்களைக் காத்து வருகின்றது. இங்கு அர்பொரியல் ரடுஃபா மர்கோரா எனப்படும் அரிய வகை, பெரிய அணில்கள் பாதுகாக்கப் படுகின்றன. சாம்பல் நிறத்திலிருக்கும் இந்த அணில்கள் 1 முதல் 1.8 கிலோ எடை கொண்டு ஒரு சிறிய பூனை அளவுக்குப் பெரியதாக இருக்கின்றன. இவை மூக்கிலிருந்து வால் வரையிலும் 73.5 செ.மீ நீளம் கொண்டுள்ளன. வால் பகுதி மட்டுமே 36-40 செ.மீ நீளம் கொண்டவை. அச்சுறுத்தல் ஏற்படும் நேரங்களில் மரம் விட்டு மரம் தாவிச் செல்ல ஏதுவாக, மரங்களின் உச்சிக்கிளைகள் சந்திக்கும் உச்சியில் கூடுகட்டி வாழ்கின்றன. தனிப்பட்ட அணில்களின் கூடுகள் 0.197 ஹெக்டேரிலிருந்து 0.611 ஹெக்டேர்கள் வரை அமைந்திருக்கின்றன.

அய்யனார் நீர்வீழ்ச்சி

மேற்குத் தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் அமைந்துள்ள ராஜபாளையத்திலிருந்து 12 கிமீ மேற்கில், அய்யனார் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் சிறந்த சுற்றுலாத் தலமாகவும் சிறக்கிறது. இயற்கை அழகு கொஞ்சும் அடர்ந்த காடுகளிடையே அமைந்துருக்கும் இக்கோயில் அருகே 15 அடிகள் உயரத்தில் ஒரு நீர்வீச்சியும் அமைந்துள்ளது, குறிப்பிடப்படுகின்றது.

பிளவக்கல் அணை

பிளவக்கல் அணை, மதுரையிலிருந்து 90கிமீ, விருதுநகரிலிருந்து 45 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இது, கோவிலார் அணை மற்றும் பெரியார் அணை என இரண்டு பிரிவாக உள்ளது. பெரியார் அணையின் கொள்ளளவு 192மீஅடிகள், கோவிலார் அணையின் அளவு 133 மீஅடிகள். விருதுநகர் மாவட்டத்திலுள்ள இந்த அணையில் அக்டோபர் மாதத்திலிருந்து டிசம்பர் மாதம் வரை நீர் நிறைந்திருக்கின்றது. அருகில் ஒரு சிறுவர் பூங்காவும் அமைந்து, சிறந்த சுற்றுலாத் தலமாக விளங்குகின்றது.

காமராஜர் இல்லம்

தமிழக அரசு, கர்மவீரர் காமராஜர் பிறந்த இல்லத்தை நினைவகமாக காத்து வருகின்றது. இவ்வில்லத்தின் அறைகளில், தலைவரின் வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்வுகள் பற்றிய புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன. தலைவரின் சில ஆடைகள், கடிகாரம் மற்றும் அவர் உபயோகப்படுத்திய சில பொருள்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.